Friday, March 5, 2010

Contact - S.Gandhi -gandhi_ril@yahoo.com,gandhi222@gmail.com

ஜோதிட சாஸ்திரம்


அதி அற்பதமான "வேதத்தின்"ஒரு அங்கமே 'ஜோதிஷம்' ஆகும்.' ஜோதிஷம்' கலை இருள் படிந்து கிடக்கும் மனிதனின் வாழ்கையை வெளிக்காட்டி வழி காட்ட கூடிய கலை. தற்காலத்தில் இத்ஜோதிட கலை 'ஜோதிடர்' என்ற போர்வையில் இருந்துகொண்டு சரியான பலன் (Predictions) தராதவர்களால் அதன் பெருமையை இழந்து கொண்டிருக்கிறது.

உண்மையில்'ஜோதிடம்'நன்கு கற்பதற்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாவது தேவை.அப்படியே கற்றாலும்,வெள்ளம்,இயற்கை சீற்றங்கள், பூகம்பம் போன்றவைகளை ஜோதிடத்தில் கணிப்பது கடினமே.
ஜோதிட சாஸ்திரத்தின் முதல் நூல்'பிருஹத் சம்ஹிதை 'வராகமிகிரர், மகரிஷியால் இயற்றப்பட்டது.அதன் வரிசையில் வந்த அரும்பெரும் நூட்களான சாராவளி, உத்ர காலமிர்தம், காலபிரகசிகா, குமாரசுவாமியம், உள்ளிட்ட ஏராளமான நூல்கள் ஜோதிட சாஸ்திரத்தை தெளிவாக விளக்குபவை.

இவற்றை சிரத்தையோடு கற்றால்,ஜாதக கட்டத்தில் 12 பாவங்களின் பலன்களையும் நாம் துல்லியமாக கண்டு உணரமுடியும்.

ஜோதிடம் என்ற இக்கலையின் மூலம், தகுந்த நேரத்தில், தெளிவான முடிவு எடுக்கமுடியும்.

32 வருடஙகள் ஜோதிட துறையின் அனுபவம் பெற்ற பெரியவர் ஒருவரின் மேற்பார்வையில் நாங்கள், டிகிரி சுத்தமாக ஆராய்ந்து தரும் பலன்கள், எல்லாவிதத்திலும் மிக சரியாக பொருந்தும்.

உங்களில் ஒருவராக இருந்து உங்கள் குறைகளை, பலம், பலவினங்களை தெள்ள தெளிவாக எடுத்துணர்த்த நாங்கள் தயார். இது ஒருவகையில் ஆத்மார்த்த அர்பணிப்பே.இதன் மூலம் அடையும் பொருள், பெரும்பாலும் அனாதை ஆசிரமங்கள், ஆதரவற்ற முதியோர்கள், திருக்கோயில் புணர் நிர்மாணப் பணிக்கு அர்பணிக்கப்படுகின்றது. அதன் விவரம் உங்களுக்கு தரப்படும்.ஆனால் இத்தகைய திருக்கோயில்களில் பல இன்றும் அறியப்படாமலே உள்ளன.அத்தகைய திருக்கோயில் தரிசனம் பெற்றிட அனைவருக்கும் வாய்ப்பு திறந்தே இருக்கிறது.

கே.பி முறையில் அப்படி என்ன விஷேஷம்?


மேலோட்டமாக இல்லாமல் கிரகங்கள் நட்சத்திர ரீதியாக ஆராயும் முறை.
டிகிரி முறையில் ஜாதகங்கள் துல்லியமாக கணிக்கப்படுவதால் பலன்களும் துல்லியமானதாக அமையும்.
கே பி முறையில் கணிக்கப்படும் ஜாதகங்கள் ஒருவருக்கு இருப்பது போல மற்றொருவருக்கு அமையாது.
(வெறும் ராசி நவாம்ச வைத்து பார்க்கப்படும் ஜோதிடம் 480 நபர்களுக்கு ஒன்று போலவே இருக்கும். இது போன்ற பொதுவான ஜோதிடம் அல்ல கே.பி முறை)
27 நட்சத்திரங்களை பகுத்து மிகவும் அதிக நுண்ணிய பிரிவுகளாக 249 உட்பிரிவில் ஜாதகம் கணிக்கலாம்.
ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறிப்பட்ட தேதியில் நடக்கும் என கூறும் அளவிற்கு துல்லியமாக கூற முடியும்.
பரிகாரங்கள், தோஷங்கள் போன்ற தகிடுதத்தங்கள் இல்லை.
துல்லியமான, தூய்மையான மற்றும் விஞ்ஞான ரீதியான கே.பி முறையை கற்றுக்கொள்ள உங்களை அழைக்கிறோம்.


நட்சத்திரம் என நான் சொல்லுவது ஒரே ஒரு நட்சத்திரத்தை குறிப்பதில்லை. பிரபஞ்சத்தில் என்னிலா கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது. எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப சில தலைப்புகளில் பிரித்துவிடலாம்.


பிறப்பால் அனைவரும் ஒன்றாக இருந்தாலும் அரசும்,மக்களும் ஜாதீய அடிப்படையில் பிரிவு பெருகிறார்களே அது போல. பிரபஞ்ச நட்சத்திரங்கள் 27 வகையானது என பிரிவுபடுகிறது. கவனிக்க. 27 நட்சத்திரங்கள் அல்ல. 27 வகையான நட்சத்திர கூட்டங்கள்.


ராசிமண்டலம் 360 டிகிரி கொண்டது என்பது நாம் கண்டோம்.
இந்த 360டிகிரியில் 27 நட்சத்திரங்கள் எப்படி அமைகிறது என காண்போம்.

360 டிகிரியில் 27 பிரிவு என கொண்டால் (360 / 27= 13 பாகை 20 கலை ) 13.20 என வரும்.

உதாரணமாக ஒரு பெட்டியில் ஒரு டஜன் குளிர்பான பாட்டில்கள் வைக்கலாம் என்றால், உங்களிடம் நான்கு பெட்டியும் நாற்பது குளிர்பான பாட்டில்களும் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

பள்ளி நாட்களில் கேட்கப்பட்ட கேள்வி போன்று இருக்கிறதா?

முதல் பெட்டியில் [1 முதல் 12]
இரண்டாம் பெட்டியில் [13 முதல் 24]
மூன்றாம் பெட்டியில் [25 முதல் 36]
நான்காம் பெட்டியில் [37 முதல் 40]

என பிரித்து வைப்போம் அல்லவா?

அதே போல ராசி எனும் பெட்டியில் நட்சத்திரம் எனும் குளிர்பான பாட்டில்களை அடுக்குவோம். ஒரு நட்சத்திரத்தின் அளவு 13.20. இதை வரிசையாக ராசிமண்டலத்தில் அடுக்கி வரிசைப்படுத்த வேண்டும்.

ஒரு ராசியானது 30 டிகிரி கொண்டது. எனவே இதில் 13.20 + 13.20 என இரண்டு நட்சத்திரங்கள் வைக்கலாம். அப்படி வைத்த பிறகு 26.40 டிகிரி போக ஒரு ராசியில் மீதம் 3.20 டிகிரி எஞ்சி நிற்கும்,அதில் ஒரு நட்சத்திரத்தின் ஒரு பகுதியை வைத்து மீதியை அடுத்த ராசிக்கு எடுத்து செல்லலாம். அடுத்த ராசியில் நட்சத்திரத்தின் 10டிகிரி வரும்.


இவ்வாறாக ராசிமண்டலம் முழுவதும் 27 நட்சத்திரங்களை வைக்க முடியும்.


நமது வீட்டின் ஜன்னல் வழியே வானத்தை பார்த்தால், வானம் சதுரமாக தெரியும். ஆனால் வானம் சதுரம் அல்ல. அது போல ராசி மண்டலம் மூலம் பார்க்கும் பொழுது நட்சத்திரம் 13.20 பாகை அளவே தெரிகிறது. அதனால் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் 13.20 அளவில் தான் இருக்கிறது என முடிவு செய்ய கூடாது.ஒன்பது கிரகங்கள் மூன்று நட்சத்திரம் வீதம் 27 நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறது. 9X3 =27.

கீழ்கண்ட படத்தில் நட்சத்திரங்கள் எப்படி ராசிமண்டலத்தை அமைக்கிறது என காணலாம்.
நட்சத்திர பெயர்கள் நமக்கு தேவை இல்லை. அஸ்வினி முதல் ரேவதி வரை நட்சத்திரங்களை மனப்பாடம் செய்ய தேவை இல்லை. கீழ்கண்ட வரிசையை மனதில் வையுங்கள். நட்சத்திரத்தை ஆளும் கிரகமும் அது எடுத்துக்கொள்ளும் டிகிரியும் மட்டுமே முக்கியம்.


கேது------13.20
சுக்கிரன்----13.20
சூரியன்----3.20 ----10.00
சந்திரன்----13.20
செவ்வாய்---6.40---6.40
ராகு------13.20
குரு------10.00------3.20
சனி------13.20
புதன்-----13.20

கேது முதல் புதன் வரை உள்ள கிரகங்கள் மேஷம் முதல் கடகம், சிம்மம் முதல் விருச்சிகம், தனுசு முதல் மீனம் என மூன்று நிலைகளில் ஒரே அமைப்பில் தான் இருக்கிறது.

இதில் சூரியன், செவ்வாய், குரு என்னும் கிரகங்கள் மட்டுமே இரு பிரிவுகளாக பிரிந்து இரு ராசிகளில் வரும். மற்றவை முழுமையாக ஒரே ராசியில் இருக்கும்.


இன்றைய பாடம் உங்களுக்கு கணிதமாக இருப்பதாக தோன்றலாம், உண்மையில் இது லாஜிக்கலான விஷயமே அன்றி கணக்கு சார்ந்த விஷயம் அன்று. நட்சத்திர மண்டலம் எனும் இந்த விஷயம் மிகவும் முக்கியனானது. இதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் ஜோதிடத்தை கற்றும் பயனில்லை.


நட்சத்திர மண்டலம் எனும் பாடம் இன்றுடன் முடியவில்லை. அடுத்த பாடத்திலும் தொரும்.

------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :
மேற்கண்ட நட்சத்திர மண்டல படத்தில்,மேஷம் முதல் கன்னி ராசி வரை மேலிருந்து கீழாக நட்சத்திரங்களை குறித்தோம். ஆனால் துலாம் முதல் மீனம் வரை கீழிருந்து மேலாக குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன்?

[கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் உங்கள் புத்திசாலிதனத்திற்கும், கவனிப்பு திறனுக்கும் உள்ள கேள்விகள். பல ஜோதிட புத்தகங்களை படித்து பதில் சொல்லவேண்டிய கேள்வி அல்ல. சிந்தித்து பதில் கூறுங்களேன் ]அதில் பின்வரும் வடிவில் தகவல்கள் இருக்கட்டும்.

பெயர் :
பிறந்த தேதி :
பிறந்த நேரம் :
பிறந்த இடம் :
கேட்கவிரும்பும் கேள்வி :

திருமணம் முதல் அனைத்திற்கும் நல்லநாள்,நல்லநேரம் ஏன்?

திருமணநாள் மட்டுமல்ல,எல்லாசெயல்களுக்கும் அந்த செயல் நன்கு நிறைவேறி முழுபலன் அடைய நல்லநாளில்,நல்லநேரத்தில் அச்செயலை தொடங்கவேண்டியது அவசியம்.இந்த நல்லநேரம் எந்தஅளவிற்கு வேலைசெய்கிறது.என்பதன் சூட்சம ரகசியம் பலர் அறியாத ஒன்று.

நாம் பிறந்தநேரத்தை நம்மால் அமைத்துகொள்ள முடியாது.குறைந்தபட்சம் நாம் அமைத்துகொள்ளும் தொழில், திருமணவாழ்க்கை, புதுவீடு, சொத்துவாங்குதல், பிரயாணம், முக்கிய முடிவுகள் இவற்றையாவது ஒரு நல்லநேரத்தில் தொடங்கினால் பலன் உறுதி.நீங்கள் தொடங்கும் நேரம் நல்ல லக்கினத்தில் அமைவது சிறப்பு. அந்த தொடக்க லக்கினமே, அந்த குறிப்பிட்ட செயலை நடத்தி செல்கிறது. முற்றும் துறந்த ஞானம் பெற்ற முனிவர்கள் தாம் ஜீவசமாதி கூடும் நேரத்தை நல்ல கிரக சஞ்சாரம் உள்ள அன்று தான் தொடங்குவார்கள். இப்படி இருக்க நம்மைபோல் சாதாரண மனிதர்களுக்கு நல்லநேரம் அவசியம் பார்க்கவேண்டிய ஒன்று. இது இப்படியிருக்க பலர் இன்று மனம்போல லக்கினத்தை தவறாக குறித்து தந்துவிடுகிறார்கள். லக்கினம் குறிப்பதில் மிகுந்த கவனம்தேவை.

உதாரணமாக திருமணநாள் லக்கினம், நட்சத்திரம், சந்திரன் நிற்க்கும் இடம்-5,7,8-ஆமிடங்கள் சுத்தமாக அமையவேண்டும். இல்லையெனில் ஏற்படும் விளைவுகள் மோசமானவையாக இருக்கும். உங்கள் திருமண வாழ்வு முழுவதையும் அக்குறிப்பிட்ட லக்கினமே வழி நடத்தும். கிட்டதட்ட உங்கள் ஜெனன ஜாதகம் போலவே செயலாற்றும். நல்ல லக்கனத்தில் மணம் புரிந்துகொண்ட இருவர் பிரிவையோ, மனக்கஷ்டத்தையோ, நீண்டகால குறைபாடுகளையோ அடைந்தது இல்லை. ஆகவே எந்த செயலுக்கும் நல்லநேரம் அவசியம். 32 ஆண்டு அனுபவம் பெற்ற எங்கள் ஜோதிடர் இவ்விஷயத்தில் அதிக அக்கறையும், பொறுப்பும் கொண்டவர்

திருமணபொருத்தம் எப்படி பார்க்கிறோம்?

இரண்டு வெவ்வேறு பழக்கவழக்கம் உள்ள குடும்பங்களிலிருந்து இல்வாழ்வில் இணைய போகும் இருவரின் (ஆண், பெண்) ஜாதகங்களை கவனமாக ஆராய்கிறோம். அதன் பின்னர் தான் உறுதியான முடிவுகளை வெளியிடுகிறோம்.


இருமனம் இணையும் திருமணங்கள் தற்காலத்தில் வியாபாரம் போல நடத்தப்பட்டாலும் குறைந்தபட்சம் பொருத்தமாவது பார்த்து சேர்க்கவும். திருமணபந்தம் என்பது இரு உயிர்கள் ஒன்றையொன்று அன்பில் மலர்வதற்கான வாய்ப்பு அதை விடுத்து ஒருவரிடமிருந்து ஒருவர் என்ன அனுகூலம் பெறலாம் என மறைமுகமாக எதிர்பார்த்தும், ஒருவரை முற்றிலுமாக தனக்கு சாதகமாக மாற்றி கொள்ளும் முயற்ச்சியாகவும் அமையுமானால், அத்திருமணம் சமூக அளவில் பிரியவில்லை என்றாலும் மனதளவில் இருவரும் தனித்தே வாழ்வர். ஆகவே ஜாதகம் பார்க்கும்பொழுதே வரனின் லக்கினம், பூர்வபுண்ணியம், சந்திரன் இவைகளை நன்கு ஆராய்ந்து 7,8-ஆமிடஙகளையும் தீர ஆராய்ந்தும், முடிவு எடுப்பதே உத்தமம். அதைவிடுத்து வெறும் 10/10 நட்சத்திரபொருத்தம் மட்டும் திருமண தேவையை முடித்து வைத்தால் அத்திருமண வாழ்வு துன்பமிகு விளைவுகளை சந்திக்க நேரிடும்.


மகன், மகள்
உங்கள் மகள்(அ)மகன் யாராக இருப்பினும் அவர்களுடைய திருமண வாழ்க்கை மிக முக்கியமானது அல்லவா. வெறும் வியாபார எண்ணத்தோடு செயல்படும் ஒருவரின் முடிவு எவ்விதத்திலும் உண்மைக்கு அருகில் இருக்கமுடியாது. மேலும் ஜோதிடம் என்ற கலை ஒன்றே அதில் இரு வேறுபட்ட கருத்துகளுக்கு வாய்ப்பே இல்லை. ஜோதிடம் பயின்றவர் தன் சுய கற்பனையும், Psychalogical அறிவையும் பயன்படுத்தாமல் ஜோதிட விதிகளை மட்டும் கணக்கில் கொண்டு இரு ஜாதகங்களை இணைத்தால் அவர்களுடைய வாழ்வு சிறக்கும்.

வேலை, தொழில்

வேலை தேடும் இளைஞர்களின் கனவு எப்போ வேலை கிடைக்கும், தொழில் தொடங்க முனைவர்களின் கனவு எப்பொழுது-தொழில் சிறக்கும் இயற்க்கையாகவே நம் மனம் எந்த தொழிலை விரும்புகிறதோ அத் தொழில் வேலைதான் நமக்கு ஏற்றது. அதைவிடுத்து பிறர் செய்கிறார்கள் என்பதற்க்காக எந்த தொழிலையும் ஏற்க்க வேண்டாம்.
வெற்றியின் அடிப்படையே இயல்பு (இயற்க்கையான விருப்பம், தேர்வு), இயல்பை ஒட்டிய செயல், அந்த செயலின் தீவிரம் அதற்குறிய பலன்-
உ.ம்
இயல்பு-- பாடுதல்
செயல் - பாடும் திறமையை கற்றல், வளர்த்தல்.
செயலின் தீவிரம் – அதை தவிர வேறொரு சிந்தனை அற்று இருத்தல்
பலன் – அதன் மூலம் அடையும் பொருள்(அ) ஏதோ ஒன்று.

வேலை, தொழில்
10-ம் இடம் ஜூவனஸ்தானம்- அந்த பத்தாமிடம்-பத்தாமிட அதிபதி-பத்தாமிடத்தை பார்க்கும் கிரகம் மூலமாக ஜூவன, தொழில் அமையும். அதே போல்

லக்கினம் தொழிலில் ஏற்கும், உறுதி, இவற்றையும்

பூர்வ புண்ணியம் ஐந்தாமிடம், தொழில்நடத்தும் இயல்பையும்ஜோதிட சாஸ்திர‌த்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்..


எல்லோரும் ஒரே பஞ்சாங்கத்தை தான் உபயோகிக்கிறோம். சிலர் சொல்வது நடக்கிறது. பலர் சொல்வது நடப்பதில்லை. இதை வைத்தே பகுத்தறிவாளர்கள் ஜோதிடம் விஞ்ஞானம் அல்ல என்று கூறிவிடுகிறார்கள்.
எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன்.
ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.
1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் ‍/ லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.
2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.
லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.
3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்
4.பாபர்கள் வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்
5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்
6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.
7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்
8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்
9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல்,
10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை மணத்தல் போன்ற அம்சங்களும் நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.
11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.
12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.
13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.

14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத்